பரமக்குடி : பரமக்குடி - முதுகுளத்துார் மேம்பாலம் கட்டப்பட்டு 5 ஆண்டை நெருங்கும் வேளையில்,மின் விளக்குகள் அனைத்தும் எரியாமல் இருளில் வாகன ஓட்டிகள்தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் இருந்து முதுகுளத்துார் செல்லும் வழியில் ரயில்வே டிராக் குறுக்கிடுகிறது. இதனால்ஏற்பட்ட நெரிசலைகருத்தில் கொண்டு மேம்பாலம் மற்றும் சுரங்க பாதை அமைக்கப்பட்டது.தொடர்ந்து பாலத்தின் மேலும், கீழும் 50 க்கும் மேற்பட்ட விளக்குகள் பொருத்தப்பட்டது. பராமரிக்கப்படாமல், கவனிப்பாரற்று விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக என தற்போது ஒட்டு மொத்தமாக எரியாத நிலை உள்ளது.
இதனால் மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலை, முதுகுளத்துார், இளையான்குடி மற்றும் பரமக்குடி நகருக்குள் செல்வோர் தட்டுத்தடுமாறி செல்கின்றனர்.ஆட்டோ, டூவீலர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல அமைக்கப்பட்ட சுரங்க பாலத்தில், திறக்கப்பட்ட நாள் தொடங்கி, விளக்குகள் இன்றி பெண்கள், முதியோர் அச்சத்துடன் செல்கின்றனர்.