சென்னை; திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், சென்னை சிறுவர்கள் அசத்தினர்.தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 'திருக்குறள் முற்றோதல்' என்ற பெயரில், திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெறும், 100 மாணவர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்தாண்டு எல்லா மாவட்டங்களிலும், பள்ளி மாணவர்களுக்கான முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது.சென்னையில், இதன் நிறைவு நிகழ்ச்சி, எழும்பூரில் உள்ள, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில், துறை இயக்குனர் விஜயராகவன் தலைமையில், நேற்று நடந்தது.
இதில், மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர் ஆகாஷ்ராஜா மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி நவ்யா ஆகியோர், அனைத்து குறள்களையும், திருக்குறளின் வரிசை எண், முடிவு சீர், முதல் சீர், அதிகாரத்தின் தலைப்பு உள்ளிட்டவற்றை சொன்னதும், தம் மழலைக் குரலால் அழகாக சொல்லி அசத்தினர்.அவர்களின் உச்சரிப்பும், தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியது.