புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தயார் நிலையில் 3 பேரிடர் மீட்பு குழுக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2020
05:55

புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக மாவட்ட போலீஸ் சார்பில் பாம்பன், தொண்டி, சாயல்குடி ஆகிய மூன்று இடங்களில் மூன்று பேரிடர் மீட்பு குழுக்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.அவசர உதவிக்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.இவர்களுடன் 800 நீச்சல்தெரிந்த தன்னார்வலர்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர்மீட்பு பயிற்சி பெற்ற 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 40 பேர் இரு குழுக்களாக மண்டபம், தங்கச்சிமடம் பகுதியில் தயார் நிலையில் உள்ளனர்.



மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையில், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சிறிய டார்ச் லைட், சிறிய அளவிலான உணவு பொருட்களை மக்கள் தயாராக வைத்துஇருக்க வேண்டும். ஆபத்தான வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.கடற்கரை, உயரமான பாலம்(பாம்பன் பாலம்), உயரமான கட்டடங்களில் நிற்க வேண்டாம். குறிப்பாக தனுஷ்கோடிக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.



வெளி மாவட்டத்தினர் சுற்றுலா வர வேண்டாம்.மேலும் அவசர உதவிக்கு ராமநாதபுரம் பேரிடர் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணிலும், 04567-230060 என்ற தொலைபேசியிலும், எஸ்.பி.,யின் குறைதீர் அலைபேசி 87782 47265, எஸ்.பி., அலுவலகத்தை 04567- 230110, 230111 ஆகிய தொலைபேசிகளிலும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 04567-230759, 83000 31100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X