கமுதி : கமுதி ஊராட்சி ஒன்றியகவுன்சிலர் கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடந்தது.
பி.டி.ஓ., அண்ணாத்துரை,துணை தலைவர் சித்ராதேவி முன்னிலை வகித்தனர். அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டன.அன்பரசு: கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகளை வெளிப்படையாக வழங்கவேண்டும்,பொதுநிதியில் இருந்து பிளிச்சிங் பவுடர் வாங்க ரூ.6 லட்சம் வரை எடுத்து கொண்டு இதுவரை எந்தவொரு கவுன்சிலருக்கும் பிளிச்சிங் பவுடர் வழங்கியதில்லை.கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பணி ஏதும் செய்ய முடியாததால்கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் என்றார்.
முத்துபாண்டியம்மாள்: கவுன்சிலர்கள் அனைவருக்கும் சமமாக நிதி ஒதுக்கி பணி வழங்கவேண்டும். பெருநாழியில் போர்வெல் அமைத்து பைப்லைன் அமைக்க வேண்டும்.பி.டி.ஓ., அண்ணாதுரை: அரசாணை இல்லாமல் பொதுநிதியில் இருந்து பணம் வழங்கப்படவில்லை.
தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது:கமுதி யூனியனுக்கு மாதாமாதம் வழங்கவேண்டிய பணம் கூட சரியாக வழங்குவதுஇல்லை. யூனியனுக்குவழங்கப்பட்டுள்ள நிதியை மாவட்ட நிர்வாகம் எடுத்துகொள்வதால் இங்கு எந்த பணியும் மேற்கொள்ள முடியவில்லை. உடனடியாக யூனியனுக்கு நிதி வழங்க வேண்டும்.கவுன்சிலர்கள் கோரிக்கை மனுவிற்கு நிதி வந்தவுடன் பணி வழங்கப்படும், என்றார். கூட்டத்தில் மேலாளர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.