ராமநாதபுரம் : டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகராமநாதபுரம் அரண்மனைசந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி பங்கேற்றார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, புரெவி புயலையடுத்து லேசான மழை பெய்த போதும், மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.