ராமநாதபுரம் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்சார்பில், மாநில அளவிலான மறியல் போராட்டத்தை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்துாரில் மறியல் நடந்தது.
ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர்ஹரிகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், நிர்வாகிகள் சீனிவாசன், நிலர்வேணி, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன் நடந்த மறியல் போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் ஹரிகர சுதன் தலைமை வகித்தார்.
கடும் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.5000, சாதாரணஊனம் உள்ளவர்களுக்கு ரூ.3000 மாதம் வழங்க வேண்டும். செப்., அக்., நவ., ஆகிய மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்.மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனபணிகளிலும் 4 சதவீதம்ஒதுக்கீடு வழங்கவேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களில் வாய்ப்பளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடந்தது.