பரமக்குடி : பரமக்குடியில் நேற்று காலை தொடங்கி, நாள் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.புரெவி புயல் வலுப்பெற்றதையடுத்து, கன்னியாகுமரி-பாம்பன்இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது.
பரமக்குடியில் நேற்று முன்தினம் மேக மூட்டமாக இருந்தநிலையில், நேற்று காலை தொடங்கி பரவலாக மழைபெய்கிறது.நகரில் ஆங்காங்கே உயர்அழுத்த மின்கம்பிகள்செல்லும் பாதையில் இருந்த மரங்களை அகற்றும் பணியில்மின்ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் சில பகுதிகளில் மின்தடை நீடித்தது.மேலும் வருவாய்த்துறை சார்பில் ஆற்றங்கரையோரம் மற்றும் பள்ளமான பகுதிகளில் வசிக்கும்மக்கள் பாதுகாப்பாக இருக்கும்நோக்கில் புயல் பாதுகாப்பு மையங்களை திறந்துள்ளனர்.
வைகை மற்றும் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த மாதங்களில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் நீரின்றிஅதன் வளர்ச்சி தடைபட்டது. மேலும் நயினார்கோவில்ஒன்றியங்களில் மிளகாய் பயிர்கள் ஏற்கனவே மழைநீரில் மூழ்கி வீணாகின.இதனால் விவசாயிகள்ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாலும், பருவம்தவறிய பெய்யும் மழையால் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.