திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இளந்துரை காலனியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் செல்வநாயகம், 20; இவர் கடலுார் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16; வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இந்நிலையில் குடும்ப சூழ்நிலையால் சிறுமி திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கிராமத்தில் உள்ள அவரது அத்தை வீட்டில் தங்கி திருக்கோவிலுாரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். கடந்த அக்டோபர் 15ம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.
சிறுமியின் தந்தை தனது மகளை இளந்துரையைச் சேர்ந்த கந்தசாமி மகன் செல்வநாயகம் கடத்தி சென்றதாக புகார் அளித்தார். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.செல்வநாயகம் உறவினர் வீட்டில் தங்கிருந்த இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.உடன் போலீசார் கந்தசாமி மகன் செல்வநாயகத்தை, 20; போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.