சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 30 ஆயிரமாக உயர்ந்தது.
சேலம் மாநகராட்சியில், 38 பேர், மேட்டூர், 9, கொளத்தூர், 8, நங்கவள்ளி, ஓமலூர் தலா, 6, சங்ககிரி, 5, ஆத்தூர், 4, மேச்சேரி, சேலம் ஒன்றியம், தலைவாசல் தலா, 3, காடையாம்பட்டி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி தலா, 2, இடைப்பாடி, மகுடஞ்சாவடி, வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஏற்காட்டில், தலா ஒருவர் என, 97 பேருக்கு தொற்று இருப்பது, நேற்று கண்டறியப்பட்டது. இதுதவிர, வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்களில், நாமக்கல், திருச்சியில் தலா ஒருவர் என, மொத்தம், 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், சேலம் மாவட்டத்தில், இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 30 ஆயிரத்து, 6 ஆக உயர்ந்தது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 60 பேர், நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 66, 82 வயதுடைய முதியவர்கள் தொற்றுக்கு பலியாகினர்.