ஓமலூர்: காடையாம்பட்டி, குதிரை குத்திபள்ளத்தை சேர்ந்த பழனி மகன் சிவசங்கரன், 19. இவர், சக்கரைசெட்டிப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, திருமண ஆசை காட்டி, கடந்த நவ., 11ல் கடத்தியதாக, அவரது பெற்றோர், தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மறுநாள் புகார் அளித்தனர். நேற்று, சிறுமியை மீட்ட போலீசார், ஓமலூர் மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, கடத்திய சிவசங்கரனை, போக்சோ வழக்கில், போலீசார் கைது செய்தனர்.