ஓமலூர்: இருவர், பறவையை சுட்டபோது, அந்த வழியே சென்ற தொழிலாளி மீது குண்டு துளைத்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர், புளியம்பட்டி, பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 33; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த சிறுவனுடன், கோட்டமேட்டுப்பட்டி, மாரியம்மன் கோவில் அருகே, கடந்த நவ., 30 மாலை, 5:00 மணிக்கு, 'ஏர் கன்' துப்பாக்கி மூலம், பறவைகளை சுட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சென்ற, கார்த்திகேயனின் சித்தப்பாவும், கம்பி கட்டும் தொழிலாளியுமான செல்வத்தின், 43, இடதுபுற வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால், சீல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, ஓமலூர் போலீசார் கார்த்திகேயன், 17 வயது சிறுவன் மீது, நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.