தலைவாசல்: கற்கள் பெயர்ந்து விழுந்ததால், பயணியர் அச்சமடைந்தனர். தலைவாசல் பஸ் ஸ்டாண்டில், பயணியர் அமர, நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முகப்பில், 'பயணிகள் நிழற்கூடம்' என பெயர் பதிக்கப்பட்டு, ஒட்டப்பட்டிருந்த மார்பில் கல், நேற்று முன்தினம் மாலை பெயர்ந்து விழுந்தது. அப்போது, அங்கிருந்த பயணியர் அலறியடித்து ஓடினர். பின், யாரும் அமராமல், வெளியே நின்றபடி பஸ் ஏறி சென்றனர். சேதமடைந்த கற்கள், நேற்று வரை அகற்றப்படாமல் சிதறி கிடந்தன. மற்ற கற்களும் பெயர்ந்து விழுமோ என்ற அச்சம் உள்ளதால், நிழற்கூடத்தை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.