ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ள பழமையான கட்டட மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுகிறது. ராமநாதபுரம் கேணிக்கரை மெயின்ரோட்டில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஏற்கனவே இவ்வளாகத்தில் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இக்கட்டடம் பலவீனமாகி மேற்கூரை சிமென்ட் பூச்சுக்கள் அவ்வப்போது கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலம் என்பதால் பெரியஅளவில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.