ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் டவுன் மற்றும் சுற்றுப்புறபகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமமடைந்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் துணைமின் நிலையம் மூலம் ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை, சனவேலி, புல்லமடை, பாரனுார், செங்குடி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.கடந்த ஒரு வாரமாக ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி உட்பட சுற்றுப்புற பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னையுடன்,அடிக்கடி மின்வெட்டும்ஏற்பட்டு வருகிறது. இதனால் வர்த்தகர்களும், பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.