ராமநாதபுரம் : ரஜினி ஆன்மிக அரசியல் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் பட்டாசு வெடித்தனர். பின், நகர் இணை செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி, ராஜேஸ்வரன், டாக்டர் கணேஷ்குமார், நகர் ஆலோசகர் தம்பித்துரை, மாவட்ட மகளிர் அணி கோகிலா, நகர் துணை செயலாளர் கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர்.