ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மழையால் பாதித்து புயல் காப்பகத்தில் தஞ்சமடைந்த 515 மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
புரெவி புயலால் ராமேஸ்வரம் பகுதியில்கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் தனுஷ்கோடி, தங்கச்சிமடம் அந்தோணியார்புரம், பாம்பன் சின்னபாலம், தரவைதோப்பு பகுதியில் மழைநீர் தேங்கியும், கடல் அரிப்பால் மீனவர்கள் குடிசை வீடுக்கு சேதமடையும் அபாயம் இருந்ததால், இப்பகுதியில் உள்ள 515 மீனவர்களை ராமேஸ்வரம் தெற்கு கரையூர், தங்கச்சிமடம் பேக்கரும்பு புயல்காப்பகத்திலும், பாம்பனில் தனியார் திருமண மகாலில் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு சேலை, போர்வை, பிஸ்கட் மற்றும்அத்தியாவசிய உணவு பொருட்களை முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா, அ.தி.மு.க., மாவட்ட செயலர் முனியசாமி, ராமேஸ்வரம் அ.தி.மு.க., நகர் செயலர் கே.கே.அர்ச்சுனன், நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.அர்ச்சுனன் வழங்கினர்.