பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட எல்லையை வந்தடைந்த வைகை நீர்,பார்த்திபனுார் மதகு அணை மூலம்3000 கனஅடி வீதம் நேற்று திறக்கப்பட்டது.
நவ.30ல்ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட வைகைநீர், டிச. 3 அன்று காலை பார்த்திபனுார் மதகு அணையை அடைந்தது.இத்தண்ணீரை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் திறந்துவைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் மணிகண்டன் (ராமநாதபுரம்),சதன்பிரபாகர் (பரமக்குடி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் முனியசாமி உள்ளிட்டோர் தண்ணீரை மலர் துாவி வரவேற்றனர்.மாவட்ட கலெக்டர் கூறிய போது, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நவ. 30 முதல் டிச. 5 வரை 1093.03 மில்லியன் கனஅடிதிறக்கப்பட்டது.தற்போது பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து ஒருவினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் பெரிய கண்மாய் வரைபாசன வசதி பெறும் வகையில், வலது, இடது புற கால்வாய் மூலமாகசெல்கிறது. இதன் மூலம் 67,837 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், என்றார்.