ஓசூர்:மொபைல் போன்கள் கொள்ளை வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்படுகிறது.
கடந்த, அக்., 21ல், காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட கன்டெய்னர் லாரியில், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை, சூளகிரி அருகே மேலுமலையில் ஒரு கும்பல், டிரைவர், கிளீனரை தாக்கி கொள்ளைஅடித்து சென்றது.தனிப்படை போலீசார், மத்திய பிரதேசம் சென்று, 10 பேரை கைது செய்தனர். விசாரணையில், 18 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
போலீசார் கூறியதாவது:கொள்ளையடித்த கும்பல், மொபைல் போன்களை வங்கதேசத்தில் விற்பனை செய்துள்ளனர்.கொள்ளை கும்பலுக்கு, சர்வதேச கொள்ளையர்கள், கமிஷன் அடிப் படையில், 6 கோடி ரூபாய் ஹவாலா பணமாக வழங்கியுள்ளனர்.ரஷ்யா, துபாய், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கொள்ளையர்களுக்கு, இதில் தொடர்பு உள்ளது. இதனால், சர்வதேச அளவில் உள்ள கொள்ளை யர்களை பிடிக்க, இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ.,வுக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.