கோவை:கோவை சி.ஐ.டி., கல்லுாரி தாளாளருக்கு, கல்வித்துறையில் புதுமைகளை செயல்படுத்தியதற்காக, உலக வணிக கூட்டமைப்பின் உச்ச விருது வழங்கப்பட்டது.அமெரிக்கா, ஹூஸ்டனில் உள்ள உலக வணிக கூட்டமைப்பானது, அமெரிக்க 'சேம்பர் ஆப் காமர்ஸில்' உறுப்பினராக உள்ளது. இந்த கூட்டமைப்பின் உச்ச விருதை வணிக தலைமைக்காக கோவை, சி.ஐ.டி., கல்லுாரி தாளாளர் டாக்டர் பிரசாத்துக்கு வழங்கியுள்ளது. உலக வணிக தலைமை -2020 பிரிவில், வெற்றிகரமான தலைமை பண்புக்காகவும், கல்வித்துறையில் புதுமைகளை செயல்படுத்தி, முறையான அணுகுமுறைகளுக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது உலக வணிக கூட்டமைப்பின் 'விர்ச்சுவல்' விழா மூலம் வழங்கப்பட்டது. சி.ஐ.டி., கல்லுாரிக்கு வணிக தலைமை, கல்வி தரம், புதுமைகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முதல்வர் முனைவர் செல்லதுரை, செயலாளர் பிரபாகர் உடன் இருந்தனர்.