கோவை,:கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்தவர் நரேந்திரன், 46. கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள ஒரு ஓட்டலில், மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே ஓட்டலில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த நாயணானா,49 தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்., 4ம் தேதி நரேந்திரனின் ஏழு கிராம் தங்க மோதிரத்தை, நாயணானா இரவல் வாங்கி சென்றுள்ளார்.அதன் பிறகு வேலைக்கு வராமல் தலைமறைவானார். நாயணானாவை தொடர்பு கொண்டு கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. நரேந்திரன் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், நாயணானாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.