அன்னுார்:அன்னுாரில், கோவை ரோட்டில், பொதுத்துறை வங்கி முன், மா, கம்யூ சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்; டில்லியில் போராடும் விவசாயிகளுடன் நிபந்தனையில்லாமல் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் முகமது முஷீர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிகண்டன், அகமது கபீர், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தின் விஜயகுமார், வாலிபர் சங்க நிர்வாகி அர்ஜூன் உட்பட பலர் பங்கேற்றனர்.