சூலுார்:சூலுார் அருகே மின்வாரியத்துக்கு சொந்தமான அலுமினிய கம்பிகளை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சூலுார் அடுத்த அரசூர்- பொத்தியாம்பாளையம் சாலையில் உள்ள மின்வாரிய டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் அலுமினிய கம்பிகளை, மர்ம நபர்கள் சில நாட்களுக்கு முன் திருடி சென்றனர். இதுகுறித்து, அரசூர் தெற்கு மின்வாரிய உதவி பொறியாளர் சுரேஷ்குமார், சூலுார் போலீசில் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.