மேட்டுப்பாளையம்:மருதுார் ஊராட்சியில், ரூ.1.50 கோடியில், மூன்று சிறு பாலங்கள், ஐந்து இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.காரமடை அருகேயுள்ள மருதுார் ஊராட்சியில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல கிராமங்களில், சாலைகள் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரும்படி, மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.இதன்பேரில், காலேஜ்புரம், கணுவாய்பாளையம், திம்மம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில், 70 லட்சம் மதிப்பில் சிறு பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோன்று, குருந்தமலையிலிருந்து புங்கம்பாளையம் புதுார் வரை, கெண்டேபாளையத்திலிருந்து, குருந்தமலை வரை, கட்டாஞ்சி மலைவாழ் கிராமத்தில் இருந்து, புங்கம்பாளையம்புதுார் வரை, சின்னட்டியூரிலிருந்து, அபான் பகுதி வரை உட்பட ஐந்து இடங்களில், 80 லட்சம் மதிப்பில், மெட்டல் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன என, ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் தெரிவித்தார்.