* காத்திருப்புக்கு பலன் கிடைத்தது என மகிழ்ச்சிதமிழகத்தின் நேற்றைய டாப் நியூஸ் ரஜினி தான். ஜனவரியில் புதிய கட்சி துவங்குவதாக டுவிட்டரில் அறிவித்துள்ள ரஜினி, அதன் உடன் 'இப்போ இல்லேன்னா எப்பவும்_இல்ல' என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டார். இப்போது, அது டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.ரஜினியின் அந்த அறிவிப்பு, ஒட்டுமொத்த மீடியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவரின் அறிவிப்பு வெளியானதுமே, அது டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. குறிப்பாக, ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். நீண்டநாள் காத்திருப்பு வீண்போகவில்லை என, தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல ஊர்களில், அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து என்ன சொல்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்....வெற்றி பெறுவார் சுரேஷ், ரஜினி மக்கள் மன்ற, கோவை வடக்கு மண்டல செயற்குழு உறுப்பினர், துடியலுார்:
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை, பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தோம். இப்போது தான் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. தமிழக அரசியலில், ஒரு மாற்றம் வேண்டும் என, எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு, ரஜினியின் அறிவிப்பு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.தமிழகத்தில், நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும். ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது, ஏதோ ஒரு மதத்தை சார்ந்த அரசியல் அல்ல. இது, அனைத்து மதங்களையும், அரவணைத்து செல்லும் அரசியல். துாய்மையான, ஒழுக்கமான, ஊழலற்ற அரசியலை என்பதை தான் ஆன்மிகம் என்று ரஜினி கூறுகிறார். ரஜினி, தமிழக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார்.புதிய நம்பிக்கை அசோக்குமார், ரஜினி ரசிகர், துடியலுார்:
தமிழகத்தில், அரசியல் ஒரு தொழிலாக மாறி விட்டது. இங்குள்ள மக்கள் பலர், மாற்றம் வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றனர். அதற்கு சரியான தலைமை வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது. அதை நிறைவேற்றும் விதமாக, ரஜினியின் அரசியல் பிரவேசம் உள்ளது. ரஜினி சரியான நிர்வாகத்தை தந்து, தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.காலம் கனிந்ததுபூபதி, சூலுார்:
பல்லாண்டுகள் காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது. புலி பதுங்குவது பயந்து அல்ல; பாய்ந்து வேட்டையாடத்தான் என, தலைவரின் அறிவிப்பின் வாயிலாக, மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். தலைவரின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. நேர்மையான அரசியலை, தமிழக மக்கள் பார்க்கப் போகிறார்கள்.அர்ஜூன், ராசிபாளையம்:
ரஜினி, பணம், புகழ், பதவிக்கு ஆசைப்படுவர் இல்லை. மக்கள் உரிமைக்கும், உழவுக்கும், உழைப்புக்கும் குரல் கொடுப்பவர் தான் இவர். அறம் சார்ந்த ஆன்மீக அரசியல் செய்யப்போகிறார். தமிழக மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவரின் அறிவிப்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் மட்டுமல்ல, தமிழகமே அவரை வரவேற்க தயாராக உள்ளது.நேர்மையானவர்உஷா சஜீவ், குடும்ப தலைவி, மேட்டுப்பாளையம்:
அரசியலுக்கு ரஜினியின் வருகை, தமிழக மக்களுக்கு, சிறப்பு செய்தி என்று கூட சொல்லலாம். ரஜினி, தனி வாழ்க்கையிலும், சினிமா துறையிலும்நேர்மையாக இருந்துள்ளார். அதனால் இவர் அரசியலுக்கு வந்தால், நேர்மையான நிர்வாகத்தை தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. நல்ல ஆட்சியை தருவார் என, தமிழக மக்களும் எதிர்பார்க்கின்றனர்.மக்கள் எதிர்பார்ப்புசசிகுமார், மேட்டுப்பாளையம்:
ரஜினி, பல்லாண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துள்ளதும் மகிழ்ச்சி. ஆன்மீக அரசியல் என்று கூறியுள்ளார். இவரது வருகை, மற்ற கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக சரித்திரம் மாறும்சந்திரன், அன்னுார்:
தமிழக அரசியலில் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப, ரஜினியே சரியான நபர். ரஜினி சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு வாக்களிக்க, பல லட்சம் மக்கள் காத்திருக்கின்றனர். இளைஞர்கள், பெண்கள் என, பலதரப்பினருக்கும் ரஜினி மீதான ஈர்ப்பு குறையவில்லை. தமிழக அரசியல் சரித்திரமே மாறுகிறது. ரஜினியை, அரசியல் களத்தில் பார்க்க, மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.இவரின் பின்னால்... நவமணி, அன்னுார்:
அரசியலில் நேர்மை குறைந்துவிட்டது. அரசியலில் ஆன்மீகத்தை கொண்டு வருவேன் என்று அறிவித்த ரஜினிக்கு, தமிழகத்தில் அமோக வரவேற்பு உள்ளது. நேர்மையாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் வேண்டும்; குடும்பத்தை கவனிக்க வேண்டும் என, தனது ரசிகர்களுக்கு கூறும், ரஜினியின் ஒவ்வொரு அறிவிப்பும், தமிழக மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. எனவே, ரஜினியின் பின் பல லட்சம் பேர் செல்வது நிச்சயம். துாய்மையான, நேர்மையான அரசை, தமிழகத்தில் ரஜினியால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.