மூடல்: பண பட்டுவாடா பிரச்னையால் மார்க்கெட் கமிட்டி...கொள்முதல் நடக்காததால் விவசாயிகள் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2020
04:59

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளுக்கான பணம் பட்டுவாடா செய்யாததால் வியாபாரிகள் சங்கத்தினர் ஏலத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் கமிட்டி மூடப்பட்டது.



அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி மாவட்டத்தில் அதிக விலை பொருட்கள் வரத்து உள்ள கமிட்டி. கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய பாக்கித் தொகையை சரியாக வழங்காததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய 60 லட்சம் ரூபாய் பாக்கி இருப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.பெரும்பாலான வியாபாரிகள் முறையாக கமிட்டி நிர்வாகத்திடம் பணத்தை செலுத்தியும், இ- நாம் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக விவசாயிகளுக்கு பணம் போய் சேரவில்லை. அதே நேரத்தில் கமிட்டிக்கு பணம் செலுத்தாத வியாபாரிகள் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.இதுபோன்ற பல குளறுபடிகளால் விவசாயிகளுக்கு சேர வேண்டிய 60 லட்ச ரூபாய் நிலுவையில் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறும் நிலையில், பெரும்பாலான வியாபாரிகள் கமிட்டி நிர்வாகத்திற்கு தாங்கள் எந்த பாக்கியும் இல்லாத சூழலில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதன் மூலம் பண பரிவர்த்தனையில் ஏற்பட்டிருக்கும் முறைகேட்டிற்கு தீர்வு காணும் வரை ஏலத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தனர்.



இதன் காரணமாக கடந்த மாதம் 31ம் தேதி கமிட்டி கண்காணிப்பாளர் கேப்டன்ராஜ், மணிலா மற்றும் நெல் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன், விவசாயிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒரு வாரத்தில் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக கமிட்டி பொறுப்பு கண்காணிப்பாளர் உறுதியளித்த நிலையில், வியாபாரிகள் சங்கத்தினர் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை ஏலத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்தனர்.இதன் காரணமாக நேற்று முன்தினம் முதல் கமிட்டியில் ஏலம் நடைபெறவில்லை. விளைபொருட்களை ஏலத்துக்கு எடுத்து வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் குறைந்த விலைக்கு பொருட்களை வெளிநபர்களிடம் விற்றுச் சென்றனர்.



பிரச்னைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? கமிட்டி திறப்பது எப்பொழுது என விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்னறனர்.மேலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.அதே நேரத்தில் லட்சக்கணக்கான ரூபாய் விவசாயிகளுக்கு பாக்கி எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-202011:33:22 IST Report Abuse
ஆப்பு நம்ம முதல்வர்தான் விவசாய்ப் பொருள்களுக்கு குறைந்த பட்ச விலை கொடுக்கப்படும்னு நேத்துதான் பேசியிருக்காரு. எல்லோரும் அவர் வீட்டுக்கு வண்டியை கட்டிக்கிட்டு உங்க பொருள்களோடு போங்க. போட்டுக் குடுப்பாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X