செம்பரம்பாக்கம், பூண்டி, பிச்சாட்டூர் ஏரிகள் மீண்டும் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2020
05:35

'நிவர்' புயலால் ஏற்கனவே நிரம்பி வழிந்த குடிநீர் ஏரிகளுக்கு, தற்போதைய, 'புரெவி' புயலால் பெய்யும் கன மழையால், கூடுதல் நீர்வரத்து கிடைத்து வருகிறது.இதனால், செம்பரம்பாக்கம், பூண்டி, பிச்சாட்டூர் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், அடையாறு, கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது;கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது, 3.17 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.இந்த ஏரிக்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஏரிகளில் இருந்து, நீர்வரத்து கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, இந்த ஏரிகள் நிரம்பியுள்ளன. அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேறி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வருகிறது. நவ., 25ம் தேதி, செம்பரம்பாக்கம் ஏரியில், மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு நீர்வரத்து குறைந்ததால், மதகுகள் மூடப்பட்டன. மதகுகளில் ஏற்பட்ட நீர்தாவரங்கள், அடைப்பை நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.தற்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு, 2,050 கன அடி நீர் வரத்து கிடைத்து வருகிறது. அதில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பு குறைவாக இருப்பதால், அடையாறு கரையோரங்களில், வெள்ள அபாயம் இல்லை. அதே நேரத்தில், ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதல் நீரை திறக்க பொதுப்பணித் துறை முடிவெடுத்துள்ளது. ஏரிக்கு வரும் உபரி நீரை, மொத்தமாக வெளியேற்றி, நீர் மேலாண்மையை கடைபிடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், வெள்ள சேத அபாயம் குறையும் என, பொதுப்பணித் துறையினர் நம்புகின்றனர்.சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, கிருஷ்ணா நீர் மற்றும் மழை நீரால், நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து வந்த உபரி நீரால், மொத்தம், 35 அடி நீர் மட்டமுள்ள நீர்த்தேக்கம், 33.30 அடியை தொட்டது.தொடர்ந்து உபரி நீர் வந்து கொண்டு இருந்ததால், 27ம் தேதி, நீர்த்தேக்கத்தின், 16 மதகுகளில், நான்கு மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது.தொடர்ந்து உபரி நீர் வெளியேறுகிறது. நேற்று முன்தினம் இரவு, நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பலத்த மழை பெய்தது.இதனால், நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு, 3,800 கன அடி மழை நீர், 385 கன அடி கிருஷ்ணா நீர் என, 4,185 கன அடி வீதம் நீர் வருவதால், நீர் மட்டம், 34.17 அடியாக உயர்ந்தது.இதனால், ஐந்து மதகுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு, 5,000 கன அடி வீதம், உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்தை பொறுத்து, தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிச்சாட்டூர் நீர்த்தேக்கம்திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றின் நடுவே, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் நீர்த்தேக்கம், தன் முழு கொள்ளளவு நீர் மட்டமான, 32 அடியில், 30 அடியை தொட்டது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, நீர்வரத்து ஏற்பட்டதால், கடந்த மாதம், வினாடிக்கு, 11 ஆயிரம் கன அடி வீதம், தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மழை நின்றதால், கடந்த வாரம் தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது.வினாடிக்கு, 2,500 கன அடி வீதம் மழை நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, நேற்று, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.நேற்று காலை, 11:00 மணிக்கு, அங்குள்ள மதகுகள் வழியே வினாடிக்கு, 3,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.நந்தனம் காட்டுப் பகுதி களில் இருந்து மழை நீர் வருவதால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மாநகராட்சி எச்சரிக்கை!செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால், அடையாறு கரையோர மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிவிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், 22 அடியை எட்டியுள்ளது. அதனால், ஏரியிலிருந்து, 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மேலும், நீர்வரத்துக்கு ஏற்ப, வெளியேற்றும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்படலாம். எனவே, அடையாறு ஆற்றை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாநகராட்சி சார்பில், அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. நிமிடத்திற்கு நிமிடம் தகவல் கேட்டு பெறப்படுகிறது. தேவை என்றால், நிவாரண முகாம்கள் திறக்கப்படும். அவசர தேவைகளுக்கு, மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறை, 044 - 2538 4530; 2538 4540 மற்றும் 1913 ஆகிய எண்களில் அழைக்கலாம். மேலும், கோடம்பாக்கம் மண்டலம், 94451 90210; வளசரவாக்கம் மண்டலம், 94451 90211; ஆலந்துார் மண்டலம், 94451 90212; அடையாறு மண்டலம், 94451 90213 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.பாலாறு வட்டத்தில் 827 ஏரிகள் 'புல்'பொதுப்பணித் துறையின் பாலாறு வட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலாறு, கொசஸ்தலையாறு, ஆரணியாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகள் வழியாக, நீராதாரம் பெறும், 1,644 ஏரிகள், பாலாறு வட்டத்தில் உள்ளன. வடகிழக்கு பருவ மழை காலங்களில், இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது.எனவே, தற்போது பெய்து வரும் மழையால், ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், தொடர்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது. இதனால், 827 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.அவற்றில் இருந்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், 417 ஏரிகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. ஓரிரு நாட்களில், இந்த ஏரிகள் நிரம்பி வழியும் வாய்ப்புள்ளது.இதேபோல, 230 ஏரிகளில், 50 - 75 சதவீதமும், 106 ஏரிகளில், 25 - 50 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது. மழை கொட்டி தீர்த்த நிலையில், 64 ஏரிகளில், 25 சதவீதத்திற்கு குறைவான நீர் மட்டுமே உள்ளது.நீர் வரும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதே, இதற்கு காரணம். ஐந்து மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி வரும் நிலையில், அவற்றின் கரைகளை உடைத்து, சமூக விரோதிகள், நீரை வெளியேற்ற வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகளவில் நடந்துள்ளன. எனவே, பாலாறு வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உத்தரவின்படி, இந்த ஏரிகளை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் தொடர்ந்துகண்காணித்து வருகின்றனர்.- நமது நிருபர்கள் குழு -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-டிச-202008:15:18 IST Report Abuse
Bhaskaran வருண பகவான் அருளால் இம்முறை சென்னை குடிநீர் பிரச்னை இல்லாமல் தப்பிக்கும் .அனைவரும் சிக்கனமாக தண்ணீர் பயன்படுத்தனும் .குடிசைப்பகுதிகளில் கண்காணிக்கணும் .இலவச தண்ணீரை நிறைய வீணடிக்கின்றனர் விழிப்புணர்வு தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X