விபத்தில் அப்பளமாக நொறுங்கிய கார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2020
05:37

தாம்பரம்; தாம்பரம் அருகே, தறிக்கெட்டு ஓடிய மண் லாரி மோதிய விபத்தில், கார் அப்பளமாக நொறுங்கியும், அதிர்ஷ்டவசமாக தாய் - மகன் உயிர் தப்பினர்.ராணிப்பேட்டை மாவட்டம், சிக்கராயபுரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர், வாசுதேவன், 59. இவர், சென்னை, பழவந்தாங்கலில் உள்ள, உறவினர் வீட்டிற்கு செல்ல, நேற்று மாலை, தன் தாய் கோமளவள்ளி, 85 உடன், ' மாருதி ஸ்விப்ட்' காரில் வந்து கொண்டிருந்தார்.தாம்பரம் சானடோரியம், தேசிய சித்த மருத்துவமனை அருகே வந்தபோது, மண் ஏற்றி கொண்டு, அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரியின் டயர் வெடித்ததில், நிலைதடுமாறி சாலையின் வலது பக்கம் சென்று கொண்டிருந்த கார் மீது, அந்த லாரி மோதியது.இதில், கார் ஒரு சுற்று சுற்றி, மீடியனில் இருந்து, சில மீட்டர் துாரம் தள்ளி, சாலையின் வலது புறத்தில் இருந்து, இடதுபுறமாக திரும்பி நின்றது.இதில், அப்பளம் போல் கார் நொறுங்கியது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, ஒரு மணி நேரம் போராடி, காரினுள் சிக்கி இருந்த இருவரையும் மீட்டனர்.இந்த விபத்தில், தாய் - மகன் இருவரும், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். மீட்கப்பட்ட இருவரும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதனால், ஜி.எஸ்.டி., சாலையில், இரண்டு மணி நேரத்திற்கு மேல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
10-டிச-202018:32:26 IST Report Abuse
Madhusoodhana Ramachandran லார்ரி ஓட்டுனர்கள் விதி முறைகளை பின் பற்றுவதில்லை. நான் சென்ற இரு வாரங்களுக்கு முன் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கே எஸ் டி ரோட்டில் காரில் வந்து8 கொண்டிருந்தேன். அப்பபோது இரவு ஆரம்பித்து விட்டது இரவு ஏழரை மணி இருக்கும். சென்கல் பட்டு பாலாற்றிற்கு முன் மாமண்டுர் அருகில் வரும்போது ஒரு இடது பக்க ரோட்டில் ஒரு கான்டயினீர் அறிவுப்பு இல்லாமல் தேடீர் என்று திரும்பிவிட்டது லாரீகல் ரோட்டின் யிதது பக்க பிரிவில் செல்லாமல் வலது பக்க பிரிவில் செல்வதால் தவறுகள் நடக்கிறது. பெரும்பாலும் லார்ரி ஓட்டுனர்கள் வான் ஓட்டுவார்கள் அவர்களுக்கு என்று ரோட்டில் எழு7தி வாய்த்த பாகு தீயில் செல்வதில்லை. நான் சிறுது விழிப்புடன் இருந்ததால் சடன் பிரேக் செய்து வண்டியை நிறுத்தும் படி ஆகிவிட்டது. ரோடு சென்ஸ் என்பது சிறிது படிப்பறிவு இருந்தால் தான் வரும். அதற்கு லைசென்சிங் முறையில் தகுந்த படிப்பறிவு உள்ளவர்களுக்கு லைசென்சு வழங்க வேண்டும் அப்படி சட்டம் கொண்டு வந்தபோது பெரும்பாலுமுள்ள எதிரி காட்சிகள் வாழ் வாதாரம் என்று கூச்சலிட்டு கேடு தார்கள். உயிர் பழிக்கு அவர்கள் என்ன பதில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X