திடக்கழிவு மேலாண்மை விதி பின்பற்றப்படுகிறதா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2020
05:38

சென்னை; 'திடக்கழிவு மேலாண்மை விதிகளை, உள்ளாட்சி அமைப்புகள் முறையாக பின்பற்றுகிறதா என, கண்காணிக்க வேண்டும்' என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில், 'துாய்மை இந்தியா' இயக்கத்தின் கீழ், குப்பையை வகை பிரித்து வழங்குவது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நியமிக்கப்பட்ட பரப்புரையாளர்கள், கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீர்கேடுகள்இதனால், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில், குப்பையை வகை பிரித்தல் பாதிக்கப்பட்டது. மேலும், குப்பை தொட்டிகளில், வகை பிரிக்கப்படாத குப்பை நிரம்பி, சிதறி கிடக்கின்றன. அதனால், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த பதில் மனு:கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட, துாய்மை இந்தியா இயக்க பரப்புரையாளர்கள், தற்போது, மீண்டும் குப்பை வகை பிரித்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன் காரணமாக, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில், குப்பையை வகை பிரித்து வழங்கும் அளவு, 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒப்படைப்புஇந்த இரு மண்டலங்களிலும், குப்பையை வகை பிரித்து பெறுதல், சேகரித்த குப்பையை, கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணி, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது, சுழற்சி முறையில், 24 மணி நேரமும் குப்பை சேகரித்து, கொண்டு செல்லப்படுகிறது. குப்பை சேகரிப்பு பணியை கண்காணிக்க, தனி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். தற்போது, குப்பை தொட்டிகளில், குப்பை நிறைந்து வழிதல் போன்ற புகார்கள் இல்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்ட விபரங்கள், ஏற்புடையதாக இருப்பதால், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம், 2016ல் கொண்டு வரப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றி, குப்பையை வகைப்பிரித்து பெற்று அழிக்க வேண்டும். தினமும் குப்பைகளை அகற்றி, சாலையோர தொட்டிகளில், குப்பை நிரம்பி வழிவதை தடுக்க வேண்டும். நடவடிக்கைஇல்லாவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு, பசு, எருமை, ஆடுகள் போன்றவை பாதிக்கும்.எனவே, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் அமல்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாளிதழ்களில் வரும் செய்திகள் அடிப்படையில், நேரில் ஆய்வு செய்து, திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக அமல்படுத்தாத உள்ளாட்சி அமைப்புகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X