பள்ளிக்கரணை; காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்த விரக்தியில், இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர், 128வது பிளாக்கைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்; பெயின்டர். இவரது மகள் பாரதி, 24.இவர், அதே பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவரை, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஊரடங்கு காலக்கட்டத்தில், அந்த இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.காதல் தோல்வியால், பாரதி விரக்தியுடன் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், கிருஷ்ணன், அவரது மனைவி வேலைக்கு சென்றுனர்.இரவு வீடு திரும்பியபோது, கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும், கதவு திறக்கப்படவில்லை.உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குளியல் அறையில் பாரதி துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.