சின்னமனுார் : மாவட்டத்தில் உத்தம பாளையம் மற்றும் சின்னமனுார் அரசு மருத்துவமனைகளில் எந்தவித கூடுதல் வசதியும் செய்யப்படவில்லை.
தீக்காய சிகிச்சை பிரிவு, சிசு நலப்பிரிவு, அவசர சிகிச்சைபிரிவு கிடையாது. தேவையான டாக்டர்களும் இல்லை. குறிப்பாக சின்னமனுார் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் பதவி காலியாக இரண்டு ஆண்டுகளை நெருங்குகிறது. உத்தமபாளையத்திலும் இப்பணியிடம் காலியாக உள்ளது. தற்காலிக தலைமை மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால் ரெகுலர் பணியிடம் நிரப்பினால் தான் முழு அளவில் செயலாற்ற முடியும். தலைமை சிவில் சர்ஜன் டாக்டர் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதில் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.