சின்னமனுார் : மழையால் சீலையம்பட்டியில் இருந்து குச்சனுார் செல்லும் ரோடு சகதிக்காடாக மாறி உள்ளது.
சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் மார்க்கையன்கோட்டை, குச்சனுார் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளைந்த நெற் கதிர்கள் சாய்ந்துவிட்டது. அவற்றை அறுவடை செய்ய விவசாயிகள் இயந்திரங்களை வயல்களுக்குள் இறக்கி வருகின்றனர். பின்னர் இயந்திரங்கள் திரும்பி வரும்போது பெரிய சக்கரங்களில் படிந்துள்ள சகதி ரோட்டில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் குச்சனுாரில் இருந்து சீலையம்பட்டி செல்லும் ரோடு முழுவதும் சகதிகாடாக மாறியுள்ளது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. டூவீலர்களில் சென்ற பலர் தவறி விழுந்து காயமடைகின்றனர். இந்த ரோட்டை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.