தேனி : மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நான்காம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
நிர்வாகிகள், தொண்டர்கள் மவுன ஊர்வலம் நடத்தி மலரஞ்சலி செலுத்தினர்.தேனி நேருசிலை சிக்னலில் நடந்த ஜெ., அஞ்சலி நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., மாவட்டச்செயலாளர் சையதுகான் தலைமை வகித்தார்.நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் தலைமையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளிலும் ஜெ., படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவைத் தலைவர் முருகேசன், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சுந்தரபாண்டி, கருப்பு, ரெங்கநாதன், முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பழனிச்செட்டிபட்டியில் ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமையில் ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பேரூராட்சிச் செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, நிர்வாகிகள் தயாளன், நன்றிமாறன், இளங்கோவன், அனந்தப்பன், தர்மராஜ், ஈஸ்வரன், சந்திரசேகர், மகாலிங்கம், மகாராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.போடிபோடியில் அ.தி.மு.க., சார்பில் ஜெ., நினைவு நாள் மவுன ஊர்வலம் நடந்தது. கட்டபொம்மன் சிலை அருகே துவங்கி காமராஜ் பஜார் வழியாக பஸ்ஸ்டாண்ட் வந்தடைந்தனர்.
அதன் பின் பஸ்ஸ்டாண்ட் அருகே மா வட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் ஜெ., படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.நிர்வாகிகள் பங்கேற்றனர்.கம்பம்கம்பத்தில் டிராபிக் சிக்னல் அருகில் ஜெ., படத்திற்கு ஜக்கையன் எம்.எல்.ஏ., மலரஞ்சலி செலுத்தினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் சோலைராஜ், நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக தொகுதியில் பல்வேறு கிராமங்களில் ஜெ., படத்திற்கு எம்.எல்.ஏ., மலரஞ்சலி செலுத்தினார்.
கூடலுார்கூடலுாரில் அ.தி.மு.க., நகர செயலாளர் அருண்குமார் தலைமையில் பழைய பஸ் ஸ்டாண்டில் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெ.,க்கு படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். நகர தலைவர் துரை, துணைச்செயலாளர் பாலைராஜா, பொருளாளர் நடராஜன், நகராட்சி முன்னாள் தலைவர் சின்னமாயன், நிர்வாகிகள் பெரியராமர், லட்சம், சேதுபதி, மனோஜ், பூபேஸ்குப்தா, திருவாளன்,பூபேஸ்கண்ணன், முருகன், அபுதாகீர், ஜெயராஜ் கலந்து கொண்டனர்.பெரியகுளம்பெரியகுளம் நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை அருகேவைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்ஜெ., படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகர செயலாளர் ராதா தலைமை வகித்தார்.
துணை செயலாளர் அப்துல்சமது,ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, அன்னபிரகாஷ், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் முருகானந்தம், கீழவடகரை ஊராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் சிவக்குமார், அன்பு, ராஜவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ரவீந்திரநாத் எம்.பி.,அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த ஜெ., படத்திற்கு அ.தி.மு.க., நிர்வாகிகள்உட்பட ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர். *தேவதானப்பட்டி, வடுகபட்டி, தாமரைக்குளம், சில்வார்பட்டி உள்ளிட்ட ஒன்றியப்பகுதி களில் ஜெ., படத்திற்கு மாலை அணிக்கப்பட்டது.