கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு தேவராஜ் நகரை சேர்ந்தவர் முருகன் 41. கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் தற்காலிக பணியாளராக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். கடமலைக்குண்டு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மறியல்: இந்நிலையில் முருகன் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் தேனி- - கடமலைக்குண்டு ரோட்டில் மறியல் செய்து அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தினர்.
ஆண்டிபட்டி டி.எஸ்.பி., தங்க கிருஷ்ணன், போலீசார் பேசி சமாதானம் செய்தனர். காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உடலை வாங்கிச்சென்றனர்.