கூடலுார் : கூடலுாரில் உலக மண்வள தினவிழா வேளாண் உதவி இயக்குனர் சின்னகண்ணு தலைமையில் நடந்தது.
மண்வள பாதுகாப்பில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. மண்மாதிரி எடுக்கும் முறை உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு கூறப்பட்டது. உதவி வேளாண் அலுவலர்கள் வளர்மதி, அறிவழகன், 'அட்மா' வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜக்கையன், 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.