தேவதானப்பட்டி : மஞ்சளாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து ஒரு வாரம் ஆன நிலையில்நீர் மட்டம் தொடர்ந்து 55 அடியாகவும், நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ளதலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்த மழையால் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து நவ. 29ல் பாசனத்திற்காக தினமும் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்றைய நீர் மட்டம் 55 அடி.நீர் வரத்து வினாடிக்கு 285 கனஅடி.மழையால் தொடர்ந்து நீர் வரத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த அணையால்தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, நிலக்கோட்ைட பகுதிகளில் 2111 ஏக்கர் என மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.