பெரியகுளம் : பெரியகுளம் அருகே மேலக்காமக்காபட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 35. இவரது நண்பர் ராஜ்குமார் 32. இருவரும் காரில் வடுகபட்டியில் இருந்து பைபாஸ் ரோட்டில் தேனிக்குசென்று கொண்டிருந்தனர். காரை சதீஷ்குமார் ஓட்டினார். வழியில்தென்கரை எஸ்.ஐ., தெய்வேந்திரன் அதனை சோதனையிட்டார். அதில் பதுக்கப்பட்ட 58 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.