கணவன் கண்முன் மனைவி பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2020
01:21

வெள்ளகோவில், ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வானை, 32. இவர் தனது கணவர் உடன் டூவீலரில் தாராபுரத்துக்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது, குப்பை கிடங்கு அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக தெய்வானை டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.'போக்சோ'வில் வாலிபர் கைதுவெள்ளகோவிலில், 17 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டு அருகே உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். வெளியே சென்ற மாணவி மாயமனார். புகாரின் பேரில், வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வந்தனர்.அதில், தாராபுரத்தை சேர்ந்த ரமேஷ், 23 என்பவர், மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. எனவே, 'போக்சோ' சட்டத்தின் கீழ், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் ரமேைஷ கைது செய்தனர்.குண்டர் சட்டத்தில் ஒருவர் கைதுதிருப்பூர், அனுப்பர்பாளையத்தில், 75 வயது மூதாட்டி ஒருவர் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து, 3 சவரன் நகையை பறித்து சென்றனர். அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்து, துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகன், 30 என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது, பல்வேறு பகுதிகளில், 11 வழக்குகள் உள்ளது. முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் கமிஷனர் கார்த்திகேயன் உத்தர விட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்கேரளா மாநிலம், கொச்சியில் இருந்து ஆயில் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்னையை நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை, அவிநாசி புதுப்பாளையம் பிரிவில், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த டிரைவர் மேட்டூரை சேர்ந்த கோவிந்தராஜை மீட்டனர். லாரியில் இருந்து வெளியான ஆயில் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்தை சர்வீஸ் ரோட்டுக்கு திருப்பி விட்டனர். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.சாலை விபத்தில் விவசாயி பலிபொங்கலுார் அருகே உகாயனுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 60. அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 55. இருவரும் விவசாயிகள். இருவரும், உகாயனுாரில் இருந்து பொங்கலுார் நோக்கி, மொபட்டில் சென்றனர். பாலசுப்ரமணியம் ஓட்டி சென்றார். பழனிசாமி பின் சீட்டில் அமர்ந்து சென்றார். அப்போது, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த கார் மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள், இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். பாலசுப்பிரமணி சிகிச்சை பெற்று வருகிறார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X