'வேலை உறுதி திட்டத்தில், 200 நாள் பணி வேண்டும்!' தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 டிச
2020
06:33
பதிவு செய்த நாள்
டிச 12,2020 06:10

திருப்பூர்;கொரோனா ஊரடங்கால் பாதித்த ஏழை மக்கள், தேசிய வேலை உறுதி திட்டத்தில், 200 நாள் பணி வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசின் தேசிய வேலை உறுதி திட்டத்தில், கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், ஆண்டுக்கு, 100 நாட்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.


ஊராட்சி அளவில், 15 முதல், 20 பேர் கொண்ட குழுக்களை உருவாக்கி, 'கிளஸ்டர்' முறையில் பணி ஒதுக்கப்படுகிறது.தற்போதைய நிலவரப்படி, தினக்கூலியாக, 252 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; சராசரியாக, 190 ரூபாய் தொழிலாளருக்கு கிடைக்கிறது. மண் வேலை மட்டுமல்லாது, மரம் நடவு மற்றும் பராமரிப்பு, புதிய கட்டடங்கள், தடுப்பணைகள், சிறு தடுப்பணைகள் உருவாக்கம், பண்ணைக்குட்டை, மழைநீர் சேகரிப்பு உறிஞ்சு குழி, மண் வரப்பு அமைத்தல் என, பயனளிக்கும் பணிகள் தேர்வு செய்யப்படுகின்றன.


கொரோனா ஊரடங்கால், கிராமப்புற மக்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டதால், கிராமப்புற மக்கள், வேலை உறுதி திட்டத்தில் இணைந்து, பணிக்கு செல்கின்றனர். இதுவரை, அடையாள அட்டை போடாதவர்களும், புதிதாக இணைந்து, தினக்கூலிக்கு பணியாற்றி வருகின்றனர்.கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, வேலை உறுதி திட்ட பணிகள் துவங்கிவிட்டன. இருப்பினும், கொரோனா தொற்று பாதித்த ஊராட்சிகளில், 20 நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டன. கிராமப்புற மக்களுக்கு, கொரோனா ஊரடங்கு பாதிப்புகளில் இருந்து, இயல்பு நிலைக்கு திரும்ப, வேலை உறுதி திட்டம் பெரும் உதவிகரமாக இருக்கிறது.


வருவாய் இன்றி தவிப்பதால், கூடுதலாக, 50 நாட்களாவது பணி வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.நுாறுநாள் திட்ட பணியாளர் கூறுகையில், 'கொரோனா ஊரடங்கு வந்த பிறகு, ரேஷன் அரிசி இல்லையெனில், சாப்பாட்டுக்கே கஷ்டம் வந்திருக்கும். நுாறு நாள் திட்டம் இருப்பதால், எப்படியே சிரமப்பட்டு, குடும்ப செலவை சமாளித்து வருகிறோம். பாதிப்பை உணர்ந்து, 100 நாள் என்பதை, 200 நாட்களாக அதிகரித்து கொடுத்தால், கிராமப்புற ஏழை மக்களின் துயரம் தீரும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-டிச-202011:48:33 IST Report Abuse
Boopathi Subramanian விவசாயத்தை முற்றிலும் அழிக்க நல்ல முயற்சி
Rate this:
Cancel
tss -  ( Posted via: Dinamalar Android App )
13-டிச-202006:31:50 IST Report Abuse
tss 1.இந்தியா விவசாயத்தில் பின்னோக்கி செல்வதற்கு இந்த 100 நாள் வேலை திட்டம் முதல் காரணம்.2.கூலி ஆட்கள் சோம்பரிகளாக மாறியதற்கு.3. விவசாயம் என்றாலே தற்பொழுது குறைந்தபட்சம் 300, 400 என்று கூலி கொடுக்க பயந்து விவசாயம் செய்யாமல் விட்டோர் பலர்.
Rate this:
Cancel
12-டிச-202020:41:13 IST Report Abuse
ஆப்பு ஆஹா...இதில் ஒண்ணுதான் 100 நாள் வேலை 200 நாள் வேலையா மாறி வருமானம் ரெட்டிப்பாக கணக்கு சரியா இருக்கு. அடுத்து இந்த மசோதாதான். போட்ரா வெடிய...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X