ஆவின் பொது மேலாளர் மீதான புகார் குறித்து விசாரணை: ரூ.8 கோடி முறைகேடு குறித்து ஆய்வுக்கும் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 டிச
2020
11:53
பதிவு செய்த நாள்
டிச 14,2020 06:04

மதுரை: மதுரை ஆவின் பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அரசு துணை செயலர் அறிவுடைநம்பி உத்தரவிட்டுள்ளார்.





மதுரை ஆவின் ஓய்வூதியர்கள் சார்பில் கணேசன் அளித்த புகார் மனுவில், ஆவினில் டெக்னீஷியன்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மூலம் ரூ.பல லட்சம் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.



62 புதிய பணியிடங்களை நிரப்ப உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் மூலம் ரூ.10 - 30 லட்சம் முன்கூட்டியே வசூலிக்கப்பட்டுள்ளது.பத்து ஆண்டுகளுக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்து ரூ.பல லட்சம் கமிஷன் பெறப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்காததால் 400 ஓய்வூதியர் களுக்கு வழங்க வேண்டிய விடுப்பு சம்பளம் ரூ.8 கோடி நிலுவையில் உள்ளது உள்ளிட்ட புகார்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து டி.ஆர்.ஓ., நிலையில் உள்ள பொது மேலாளர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு துணை செயலருக்கு அறிவுடைநம்பி பரிந்துரைத்துள்ளார்.



மேலும் ஆவின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ.8 கோடி டெபாசிட் செய்ததில் முறைகேடு நடந்தது குறித்து ஆவின் மேலாண்மை இயக்குனர் வள்ளலார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கூட்டுறவு இணைப் பதிவாளர் வெங்கடேன் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
15-டிச-202014:35:14 IST Report Abuse
RajanRajan உங்களுக்கு என்னப்பா பிரச்சினை. ஆவின் கூட்டுறவுலே ஊழல் நடக்குதுன்னு சொல்லுறீங்க ரொம்ப நல்ல விசையம் தானே. எங்கே ஊழல் நடக்கலியோ அங்கே தான் அம்மாவழி அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். பாரு அந்த அண்ணா சூரப்பவை ஏன் ஊழல் பண்ணல்லேன்னு எப்படி வதைக்கிறாங்க. இந்த பக்கம் பாரு அந்த மராட்டி சேனா பாபுவை ஒரு டிவி காரனை போட்டு விளாசியே நேரத்தை ஓட்டுறானுங்க. பாலுன்னு எடுத்துக்கிட்டியா நிச்சயமா தண்ணி ஆறா தானே ஓடும். கூடவே டெட்டால் சர்ப்ன்னு போட்டு நுரைச்சு திக் பால் ஊத்தோணுமில்லே மாடு என்ன கரும்பா தின்னுது. ஒன்னும் புரியாதா ஆளுங்களா இருக்கிறீங்களாப்பா உங்களை வச்சா அந்த மூலபத்திரத்தை தேடுறது போங்க போங்க.
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-202014:02:20 IST Report Abuse
rajesh மிகவும் மோசமான கேவலமான டாஸ்மாக் டுமீல் நாடு.....
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-202014:02:20 IST Report Abuse
rajesh மிகவும் மோசமான கேவலமான டாஸ்மாக் டுமீல் நாடு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X