போலீஸ் டைரி...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2020
05:52

மனைவி தற்கொலை: கணவருக்கு சிறைகிண்டி: வேளச்சேரி, செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார், 30. மனைவி கலைவாணி, 28. இவர்களுக்கு, ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில், கணவர் மோகன்குமார், மாமனார் சாந்தகுமார், மாமியார் கலைச்செல்வி மற்றும் மோகன் குமாரின் சகோதரி ஆகியோர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இருதினங்களுக்குமுன், கலைவாணி தற்கொலை செய்து கொண்டார். கிண்டி போலீசார், நேற்று முன்தினம், மோகன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்குபின், இதர நபர்கள் மீது, கைது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என, போலீசார் கூறினர்.பஸ்சில் 'குட்கா' கடத்தியோர் கைதுமாதவரம்: மாதவரம் போலீசார், நேற்று அதிகாலை, 1:30 மணி அளவில், அங்குள்ள புறநகர் பஸ் நிலையம் அருகே, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்த, தனியார் பஸ்சை சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட, 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 100 கிலோ குட்கா போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ஷெனாய் நகரைச் சேர்ந்த மாதுராம், 26. சோட்டோ ராம், 25, ஆகியோர் சிக்கினர். அவர்களுடன், குட்கா பொருட்களின் கடத்தலுக்கு, துணையாக இருந்த, பஸ் ஓட்டுனர்களான ஜெய்ப்பூரைச் சேர்ந்த மேபால், 30. அனுமன், 38, மற்றும் ஜோத்பூரைச் சேர்ந்த உதவியாளர் போக்ஸ்ராம், 35, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.கடன் பிரச்னையால் புரோகிதர் தற்கொலைசென்னை: ராமாபுரம், ஆறாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர், சாமிநாதன், 43; புரோகிதர். இவர், நேற்று முன்தினம், ராமாபுரம், வள்ளுவர் சாலையில் உள்ள, தனியார் விடுதியில், அறை எடுத்து தங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும், வெளியே வராததால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள், ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, சாமிநாதன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. கடன் பிரச்னையால், வீட்டில் கடிதம் எழுதி வைத்து, தற்கொலை செய்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.வீட்டில் 9 சவரன் நகை திருட்டுபோரூர்: அய்யப்பன்தாங்கல், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன், 49; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை, வீட்டை பூட்டி, ஜன்னல் அருகே சாவியை வைத்து, கொளத்துாருக்கு சென்றார். இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த, 9 சவரன் நகை திருடு போனது தெரிய வந்தது. போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.வியாபாரியிடம் திருடியவர் கைதுகோயம்பேடு: விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்தவர் ரமேஷ், 40. கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி, பழ வியாபாரம் செய்து வருகிறார். இரு தினங்களுக்கு முன், இவரது, 10 ஆயிரம் ரூபாயை, மர்மநபர் திருடியுள்ளார். இது குறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், வேலுாரைச் சேர்ந்த சரவணன், 38, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X