போலீஸ் டைரி: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

31 டிச
2020
13:22
பதிவு செய்த நாள்
டிச 31,2020 06:25

மாதவரம்: மாதவரம், பஜார் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணி, 50. இவர், நேற்று முன்தினம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும், தன் மகளுக்கு உதவியாக சென்றிருந்தார். இந்த நிலையில், அன்று இரவு, அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த, 4 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். இது குறித்து, மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



சரித்திர பதிவேடு குற்றவாளி கைது




பம்மல்: திருநீர்மலையைச் சேர்ந்தவர் வாசுதேவன், 28; சங்கர் நகர் காவல் நிலைய, சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருடைய சகோதரி வீடு, அனகாபுத்துார், காமராஜபுரத்தில் உள்ளது. நேற்று மதியம், சகோதரி வீட்டிற்கு வாசுதேவன் சென்றார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த, லாரி ஓட்டுனரான மணிகண்டன், 30, என்பவர், 'திருநீர்மலையைச் சேர்ந்த நீ, எதற்கு எங்கள் பகுதிக்கு வந்தாய்?' என்று கேட்டு, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த வாசுதேவன், கத்தியை எடுத்து, மணிகண்டனை வெட்டினார். இதில் காயமடைந்த அவர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



11 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு




புழல்: புழல், காந்தி பிரதான சாலை, லட்சுமி அம்மன் கோவில் தெரு, சக்திவேல் நகரில், சரக்கு வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில், 11 வாகனங்களின் பக்கவாட்டு கண்ணாடிகளை, மர்மநபர்கள், நள்ளிரவில் அடித்து, உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.



ஓட்டுனரிடம் பணம் பறித்தவர் கைது




செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் இனியவன், 22; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, செம்மஞ்சேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சூர்யா, 20, என்பவர், கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாய் பறித்தார். இது குறித்து விசாரித்த செம்மஞ்சேரி போலீசார், சூர்யாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



'ஹூக்கா' ரெஸ்டாரன்ட் மூடல்




கீழ்ப்பாக்கம்: சென்னையில், இளசுகளை அழிக்கும், 'ஹூக்கா' போதைப்பொருள் பயன்படுத்தும் ரெஸ்டாரன்ட்களை மூட, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, கீழ்ப்பாக்கம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ராஜரத்தினம் தெருவில் தடையை மீறி இயங்கி வந்த, ஹூக்கா ரெஸ்டாரன்டை போலீசார் மூடியதுடன், அதன் உரிமையாளர், பிரணவ், 28, உட்பட, ஏழு பேரை கைது செய்தனர்.



'மாவா' விற்றோர் சிக்கினர்




திருவொற்றியூர்: திருவொற்றியூர், அம்சா தோட்டத்தில், மாவா விற்பனை செய்யப்படுவதாக, திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, வீடு ஒன்றில், மாவா அரைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, அப்பாஸ், 21, தஸ்புதீன், 38, ஆகியோரை, கைது செய்த போலீசார், 100 கிலோ பாக்கு மூட்டைகள், 15 கிலோ ஜர்தா, இரண்டு மிக்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X