போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
05:49

கஞ்சா விற்ற வாலிபர் சுற்றிவளைப்புபம்மல்: பம்மல், நாகல்கேணியில், வட மாநில வாலிபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சங்கர் நகர் போலீசார், நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்டின் சர்தார், 30, ஷேக் யாக்கூப் இஸ்லாம், 31, ஆகிய இருவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இரு பெண்கள் தற்கொலைஓட்டேரி: சென்னை, ஓட்டேரி, பிரிஸ்லி நகர், முதலாவது தெருவைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. ஆட்டோ ஓட்டுனர். அவரது மனைவி தேவி, 44. அவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, நேற்று முன்தினம் இரவு, தேவி, படுக்கை அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.கோயம்பேடு: நெற்குன்றம், முல்லை நகர், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பிரபுதேவா, 28. அவர், அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா, 25, என்பவரை, ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லாததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில், மனமுடைந்த சங்கீதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.அரிசி குடோன் எரிந்து நாசம்கோயம்பேடு: வியாசர்பாடி, பொன்னப்பா தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 40. அவர், நெற்குன்றம், பெருமாள் கோவில் தெருவில், அரிசி குடோன் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை, அரிசி குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மதுரவாயல் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி மூட்டைகள், தீயில் எரிந்து நாசமாகின. விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.அடகு கடையில் நகை திருட்டுஆவடி: சென்னை ஆவடி, திருமலை ராஜபுரத்தைச் சேர்ந்தவர் நரேந்திரகுமார், 43. அதே பகுதியில், அடகு கடை நடத்தி வருகிறார். அவர், நேற்று காலை கடை திறக்க சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த கம்மல், மோதிரம் ஆகிய தங்க நகைகள் திருடு போயிருந்தன. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.ஏரியில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுனர்சிட்லபாக்கம்: தாம்பரம் சானடோரியம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 30; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில், சிட்லபாக்கம் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். தாம்பரம் தீயணைப்பு படையினர், இரவு, 8:00 மணியளவில் வெங்கடேசன் உடலை மீட்டனர். சிட்லபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவுமயிலாப்பூர்: நேற்று முன்தினம் மாலை, மயிலாப்பூரில் உள்ள பிள்ளையார் கோவில் தோட்டத்தில், தி.மு.க., பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, மயிலாப்பூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X