மதுரை விமான நிலையத்தில் ரூ. 300 கோடியில் விரிவாக்கப் பணிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
01:20

பெருங்குடி : மதுரை விமான நிலையத்தில் ரூ. 300 கோடியில் முனைய கட்டட விரிவாக்க பணிகள் 9 மாதங்களில் துவங்க உள்ளது, என விமான அமைச்சக தென்மண்டல பொறியியல் பிரிவு இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தெரிவித்தார்.



மதுரை விமான நிலையத்தில் நடக்கும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய டில்லியிலிருந்து விமான அமைச்சகத்தின் தென்மண்டல பொறியியல் பிரிவு இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தலைமையில் குழுவினர் நேற்று மதுரை வந்தனர்.பணிகளை ஆய்வு செய்த அக்குழுவினர் மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.சஞ்சிவ் ஜிந்தால் கூறியதாவது: மதுரை விமான நிலையத்திலும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் முடிவடையும்போது இந்த விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு முன்னேற்றம் அடைந்துவிடும்.



அப்போது பயணிகள், சரக்கு, விமானங்களின் சேவைகளும் அதிகரிக்கும். .இம் விமான நிலைய முனைய கட்டடம் விரிவாக்கம் செய்யும் பணிகள் 300 கோடி ரூபாயில் 9 மாதத்தில் தொடங்க உள்ளது. தற்போதைய முனைய கட்டடத்தில் 750 பயணிகளை கையாளலாம். புதிதாக அமையவுள்ள முனைய கட்டடத்தில் 2,600 பயணிகளை கையாளலாம்.மேலும் தற்போதுள்ளதை விட 2 மடங்கு மின்சாரம் தயாரிக்கும் சோலார் மின் திட்டம் விரிவாக்கப்பட உள்ளது.ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அதி நவீன வசதிகளுடன் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையமும், அதில் 50 மீட்டர் உயரத்தில் சிக்னல் கோபுரம் அமைக்கப்படும்.



இது முப்பரிமாணத்தில் செயல்படும் திறன் கொண்டது. இதன்மூலம் கூடுதலாக விமானங்களை தரையிறக்கலாம். கூடுதலாக 7 விமானங்களை பார்க்கிங் செய்யும் வசதியும் ஏற்படுத்த முடியும். மதுரை விமான நிலையத்தில் மேல் பகுதியில் விமான ஓடுதளமும். கீழ்பகுதியில் வாகன போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் அண்டர்பாஸ் முறை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விமான அமைச்சகத்தின் பொறியியல் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் பட்சத்தில் விமான நிலைய உள் வளாகத்தில் ரூ. 800 கோடி மதிப்பில் பல்வேறு இதர பணிகளும் நடைபெறும். என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seenivasan - singapore,சிங்கப்பூர்
10-ஜன-202116:42:47 IST Report Abuse
seenivasan //இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் பட்சத்தில் விமான நிலைய உள் வளாகத்தில் ரூ. 800 கோடி மதிப்பில் பல்வேறு இதர பணிகளும் நடைபெறும். என்றார்// மாநில அரசு தங்களின் அரசியலுக்கு மட்டும் மதுரையை பயன்படுத்தாமல் மத்திய அரசுடன் உடன்படிக்கை செய்து, தென்தமிழத்தின் தலைநகரான மதுரையை சுற்றுலா மற்றும் தொழில் துறையில் கோவையை போல ஜொலிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் தாமதப்படுத்தாமல் எடுக்க வேண்டும். - இப்படிக்கு, மதுரைக்காரன்
Rate this:
Cancel
10-ஜன-202116:34:14 IST Report Abuse
சம்பத் குமார் மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் நிறை Smuggling நடைபெறுகிறது. அதை தடுக்க அரசு புதிய கருவிகளை விமான நிலையங்களில் அமைக்க வேண்டும். நன்றி ஐயா.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
10-ஜன-202107:58:38 IST Report Abuse
Loganathan Kuttuva கொச்சின் விமான நிலையத்தில் சோலார் பானல் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள் .பானல் பகுதியில் காய்கறி பயிர் செய்யப்படுகிறது.சுத்தம் செய்யும் தண்ணீர் பயிருக்கு உதவுகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X