பட்டாசுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி.,: பா.ஜ., தேர்தல் அறிக்கை குழுவினரிடம் தொழில், வர்த்தகர்கள் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
01:57

மதுரை:'வணிகம், தொழில் வளர தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். பட்டாசு தொழிலுக்கு ஜி.எஸ்.டி., வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். வழக்குகளில் சிக்காத கிரானைட் குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்,' என, மதுரையில் பா.ஜ., தேர்தல் அறிக்கை குழுவினரிடம் தென் மாவட்ட தொழில், வர்த்தகர்கள் வலியுறுத்தினர்.தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா தலைமையிலான பா.ஜ., தேர்தல் அறிக்கை குழுவினரின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. குழு உறுப்பினர்கள் கார்வேந்தன், சசிகலாபுஷ்பா, ஸ்ரீநிவாசன், சிறுபான்மையினர் அணி நிர்வாகி ஷா, நாச்சியப்பன் பங்கேற்றனர்.தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்கள் குறித்து தொழில், வர்த்தகர்கள் கூறியதாவது:ஒரே வரி விதிப்பு முறைமுருகானந்தம், மடீட்சியா தலைவர் : எந்தவொரு சட்டங்கள் கொண்டு வந்தாலும் அதுதொடர்பான துறையினருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தொழில் துறை சட்டங்கள் தொழில்கள் வளருவதாக அமைய வேண்டும்.சிறு, குறுந்தொழில்களுக்கு ஒரே வித வரி விதிப்பு முறை வேண்டும்.ஞானசம்பந்தன், மடீட்சியா முன்னாள் தலைவர் : மதுரை மத்திய சுங்க வரி கமிஷனரகம் மூடப்பட இருக்கிறது. ஏனெனில் தென்மாவட்டங்களில் வரி வருவாய் குறைவு. காரணம் தொழில்கள் இல்லாதது தான்.27 ஜவுளிமில்கள் இருந்த மதுரையில் இன்று ஒன்று கூட இல்லை. தொழில் முனைவோர் அரசுக்கு எதிராக இருப்பதாக சித்தரிக்கப்படுகின்றனர். சீனாவில் தொழிற்பேட்டைகளில் தான் தொழில்கள் இயங்குகின்றன. இந்தியாவில் 5 சதவீத தொழில்கள் மட்டுமே தொழிற்பேட்டைகளில் செயல்படுகின்றன. அதிகளவு தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். கிரானைட் தொழில் துவங்க பரிசீலிக்க வேண்டும்.வணிகம், தொழிலுக்கு தனி அமைச்சகம்ஜெயபிரகாசம், உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர்: வேளாண் தொழில் செய்வோருக்கு உதவ வேளாண் அமைச்சகம், மீனவர்களுக்கு உதவ மீனவள அமைச்சகம் இருப்பதுபோல வணிகம், தொழில் வளர தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். இத்துறைக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நிரந்தர செயலாளராக நியமித்து சென்னை, மதுரை மண்டலங்களில் இணை செயலர்களை நியமித்தால் குறைகளை எடுத்து கூற வாய்ப்பாக இருக்கும். உணவுபாதுகாப்பு தர நிர்ணயச்சட்டத்தில் மாறுதல்கள் செய்ய வேண்டும்.ரூ.800 கோடி பட்டாசுகள் தேக்கம்கணேசன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்: பட்டாசு தொழிலில் நாடு முழுவதும் ஒன்றரை கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 365 நாட்களுக்கும் பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் தீபாவளி நேரத்தில் சுற்றுச்சூழல் மாசை காரணம் காட்டி தடை விதிக்கப்படுகிறது.இந்தாண்டு தீபாவளி நேரத்தில் 7 மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டதால் ரூ.800 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்தன. இத்தொழிலை நம்பி எட்டு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சிவகாசியில் பட்டாசு மூலப்பொருட்களின் தரச்சோதனை கூடம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும். சிவகாசி சுற்றுச்சாலையில் பட்டாசு நகரம், அச்சுத்தொழில் நகரம், தீப்பெட்டி தொழில்நகரம் அமைக்க வேண்டும்.கிரானைட் குவாரிகளுக்கு அனுமதிஆறுமுகம், சதர்ன்ஸ்டோன் இன்டஸ்ட்ரிஸ் அசோசியேஷன் ஆலோசகர்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழில் மூலம் முப்பதாயிரம்தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். முறைகேடு புகாரை காரணம் காட்டி கிரானைட் தொழில் பத்தாண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. 84 குவாரிகள் மட்டும்முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன.அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் முறைகேடுபுகாரில் சிக்காத கிரானைட் குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் புதிய குழுவை நியமித்து கிரானைட் முறைகேடு தொடர்பாக குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும்.சில்லறை வணிகத்தில் கார்ப்பரேட் நிறுவனம் கூடாது


காசிம், எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேஷன்: எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். 60 வயது மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.மாதவன், நுகர்பொருள் ஸ்டாக்கிஸ்ட் அசோசியேஷன் தலைவர்:சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. ராஜசேகரன், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்: உணவுபொருள் பேக்கிங் செய்யும் தொழில்களை காப்பாற்ற அரசாணை எண் 37 ஐ நீக்க வேண்டும்.மதுரையில் சித்தா எய்ம்ஸ் டாக்டர் ஜெயவெங்கடேஷ், இந்திய மருத்துவ நல அறக்கட்டளை தலைவர்: சித்த மருத்துவ பல்கலையை நிறுவ வேண்டும்.மதுரையில் அனைத்திந்திய சித்த மருத்துவ மையத்தை (சித்தா எய்ம்ஸ்) ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் துவங்கப்பட்ட மினி கிளினிக்குகளில் சித்தா டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். சித்தா டாக்டர்களுக்கு காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும்.இக்கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில்இடம் பெற செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக எச்.ராஜா உறுதியளித்தார். பா.ஜ., வர்த்தகர் அணி மாநில செயலாளர் கார்த்திக்பிரபு, முன்னாள் செயலாளர் சிவபிரபாகரன், கலை,கலாசார அணி தலைவர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202122:57:28 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு திருச்சி சிவாவின் இடத்தில் இப்போ ராஜா இருக்காரு போல
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
13-ஜன-202108:01:13 IST Report Abuse
Ram மேலும் கோவில்கள் அறநிலைய துரையின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி கோவில்களை மற்றும் அர்ச்சகர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X