விழுப்புரம்; மாட்டு பொங்கல் விழாவையொட்டி, கயிறு உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்சென்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, நேற்ற கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையன்று, புதுப்பானையில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து, இன்று மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.மாட்டு பொங்கல் அன்று, விவசாயிகள் தங்களின் கால்நடைகளை சுத்தம் செய்து, கொம்புகளில் வண்ணம் தீட்டி, புதிய கயிறு உள்ளிட்ட அலங்காரம் செய்து, வழிபாடு செய்வர். இதற்காக, மாடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க விழுப்புரம் எம்.ஜி., ரோடு, காமராஜர் வீதி உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் நேற்று பொதுமக்கள் குவிந்து, ஆர்வமாக வாங்கி சென்றனர்.