வானுார்; வானுார் தொகுதி பா.ஜ., சார்பில் கிளியனூர் பஸ் நிலையத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு வானுார் ஒன்றிய தலைவர் தங்க சிவக்குமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் கோதண்டபாணி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ரமேஷ்,எஸ்.சி.அணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய பொதுச் செயலாளர் கோவிந்தராசு, ஒன்றிய செயலாளர்கள் பத்மாவதி, கார்த்திகேயன் மற்றும் விவாசய அணி ஒன்றியத் தலைவர் அய்யனார், இளைஞர்அணித் தலைவர் பிரதாப், ஒன்றிய நிர்வாகிகள் நீலகண்டன், ஜெயக்குமார், கிளைத் தலைவர் வேலு உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.