திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கென கடந்த 46 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாததால், விவசாயிள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை சாலையிலேயே அடுக்கி வைக்கப்படுகிறது. இதனால், விளை பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது.கடந்த 46 வருடங்களுக்கு முன்பு தற்காலிகமாக பேரூராட்சி கட்டடத்தில் துவங்கியது. தற்போது அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டு ெஷட்களில் இயங்கி வருகிறது. இதற்காக பேரூராட்சி சார்பில் 4,600 ரூபாய் மாத வாடகையாக வசூலிக்கப்படுகிறது. தற்போது இப்பகுதியில் உள்ள பெரியசெவலை, சரவணம்பாக்கம், கொத்தனுார், கோகுலாபுரம், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விலை பொருட்களை கொண்டு வரப்படுகின்றது.விற்பனைக் கூடத்தில் கமிட்டி சீசன் காலத்தில் 3,000 நெல் மூட்டைகளுக்கு மேல் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் இடபற்றாக்குறையால் 1,500 நெல் மூட்டைகள் மட்டுமே நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.சீசன் காலத்தில் நெல் வரத்து அதிகமாகியும், மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் இல்லாமல் ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல்மூட்டைகளை விற்பனைக் கூடத்திற்கு எதிரே அடிக்கி வைத்து, எடை போடும் அவலமும் இருக்கிறது.இதனால் நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு வசதி இல்லாமல், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நனைந்து வீணாகியது. ஒருபுறம் மழைபெய்து பாதியளவு நெல் நிலத்தில் வீணாகிவிட்டன. மீதமுள்ள நெல் கமிட்டியில் நனைந்து வீணாகியது. என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.