கம்பம் - கனமழையால் ைஹவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு மற்றும் இரவங்கலாறு அணைகள் நிரம்பி வழிகிறது.
கூடுதல் தண்ணீரை சுருளி அருவிக்கு திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கம்பம் முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.மேகமலைப் பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சின்னமனுாரிலிருந்து மேகமலை ,ைஹவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு வரை 46 கி.மீ., துாரத்திற்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இங்குள்ள ைஹவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு மற்றும் இரவங்கலாறு அணைகள் நிரம்பி வழிகிறது. கூடுதல் தண்ணீர் வரத்து உள்ளது.உஷார்: இரவங்கலாறு அணையிலிருந்து ராட்சத குழாய் மூலம் சுருளியாறு மின்நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதன் வழியாக அதிகபட்சம் 141 கனஅடி மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதிகபட்சம் 35 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெறும். இந்நிலையில் கூடுதல்தண்ணீரை சுருளி அருவிக்கு திருப்ப மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உஷாராக இருக்க வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளனர். மலைமுகடுகளிலிருந்து வெளியேறும் மழைநீர், சுருளி அருவி தண்ணீர், சண்முகாநதி அணை கூடுதல்தண்ணீர் மற்றும் காட்டாற்று தண்ணீர் என முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
குடிநீர் உறைகிணறுகள் மூழ்கும் நிலை உள்ளது.உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி கூறுகையில், ''இரவங்கலாறு மற்றும் மணலாறு அணை நிரம்பியுள்ளதால் சுருளி அருவிக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட உள்ளது. முல்லைப் பெரியாற்றில்வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் உஷாராக இருக்க தண்டோரா போடப்பட்டு வருகிறது,'' என்றார்.