அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
05:11

மதுரை - மதுரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்து கலை சேவைகளில் வெற்றி வாகை சூடி பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார் மதுரை அய்யர்பங்களா ஓவிய கலைஞர் விக்னேஷ் அறிவுச் செல்வம்.




அவர் கூறியதாவது: 7ம் வகுப்பில் இருந்தே ஓவியத்தில் தீராத காதல் இருந்தது. அதற்கு பின் மதுரை ஓவிய மாஸ்டர் சண்முக சுந்தரத்திடம் முறைப்படி கற்றேன். நான் கற்ற ஓவிய கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க பயிற்சியாளராக களமிறங்கினேன். துாரிகை ஓவியம், ஆயில் பெயின்ட், ஆர்ட் பிரம் வேஸ்ட், சோப் கார்விங், மியூரல் சிலைகள் என பலவித கைவினை கலை பொருட்களை செய்கிறேன். இதை செய்வது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். இரண்டு வயது முதல் வயது வித்யாசமின்றி அனைவருக்கும் ஓவியம், கைவினை பொருட்கள் செய்ய கற்று தருவதோடு அரசு பள்ளி, வசதியில்லாத மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியும் தருகிறேன்.



சமீபத்தில் என் மாணவர்கள் 50 பேர் வீட்டில் இருந்தபடி ஒரே நேரத்தில் பாரதியார் ஓவியம் வரைந்து இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸில் இடம் பிடித்தனர். என் கலை சேவைக்காக தேசத்தின் சிற்பிஉள்ளிட்ட 15 விருதுகள் கிடைத்தன. மாணவர்களிடம் ஓவிய திறமை வளர்த்து சிறந்த ஓவிய கலைஞர்களாக உருவாக்குவதே என் லட்சியம் என்றார். தொடர்புக்கு 70924 39807.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X