திருமங்கலம் - திருமங்கலம் அருகே டி.குன்னத்துாரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் அமைச்சர் உதயகுமார் கோயில் கட்டி வருகிறார். இந்த வளாகத்தில் டிரஸ்ட் சார்பில் கிராமங்களில் நடத்தப்படும் டியூசன் பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு பயிற்சி மையமும் அமைகிறது.இக்கோயிலின் கும்பாபிஷேகம் ஜன., 30ல் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் வழங்கினார். தொகுதி மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார். மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், நகர் துணை செயலாளர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.